திருச்சியில் இரண்டு நாள் பல்வேறு அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமான மூலம் திருச்சி வந்தடைந்தார் .
அமைச்சர் கே என் நேரு , அமைச்சர் ரகுபதி ,அமைச்சர் மெய்ய நாதன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ,சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ,சௌந்தர பாண்டியன் ,காடுவெட்டி தியாகராஜன் , பழனியாண்டி ,ஸ்டாலின் குமார் ,இனிகோ இருதயராஜ் , திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை
வைகோ பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு , மாநிலங்களவை உறுப்பினர் எம் பி சிவா ,மேயர் அன்பழகன் ,துணை மேயர் திவ்யா ,மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ,மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் .
திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருவெறும்பூரை அடுத்த துவாக்குடிக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் 19.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கான புதிய கட்டிடத்தையும், 18.91 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவிகளுக்கான தனித்தனி விடுதி கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments