Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தமிழ்நாடு முதல்வர் வாகனம் பஞ்சர் – பரபரப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி, கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில்,

கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்.

பின்னர் கேர் கல்லூரியில் இருந்து திருவெறும்பூர் வழியாக தஞ்சை நோக்கி சென்ற முதல்வரின் வாகனம் துவாக்குடி பேருந்து நிலையம் பகுதியில் பஞ்சராகி நின்றது. இதனை தொடர்ந்து பின்பு வந்து கொண்டிருந்த அமைச்சர் நேரு வாகனத்தில் ஏறி முதல்வர் மீண்டும் பயணத்தை துவக்கினார்.  

பின்னர் திருச்சி – தஞ்சை சாலையில் தஞ்சை மாவட்டம் மனையேறிப்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளை ஆய்வு செய்துவிட்டு தஞ்சை சென்றார். முதல்வர் பயணம் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் காவல்துறை அதிகாரிகள் செய்திருப்பார்கள். முதல்வரின் வாகனம் பஞ்சர் ஆகும் அளவிற்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *