திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா. திருச்சியில் தெற்கு மாவட்ட மாநகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, நெசவாளர் அணி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிதிருச்சி துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் வரவேற்புரை நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் டி.செந்தில்குமார் ஆற்றினார். எஸ். வி.ராஜ்குமார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர், ஆர். பி. சுந்தரராஜன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாவட்டக் கழக மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் லீலாவேலு மாநகர துணைச் செயலாளர் சரோஜினி ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் A. பெஞ்சமின் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் குணசேகரன் மாநில அணி நிர்வாகி கவிஞர் சல்மா ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்வராஜ் பழனியாண்டி சின்னஅடைக்கண் மற்றும் மாவட்ட மாநகர கழகங்களில் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிர்க்காண கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட மொத்த அணிகள்
மதுரை சேலம்
திண்டுக்கல் பழநி
திருச்சி தூத்துக்குடி
வெற்றி பெற்ற அணிகளின் விவரம்
முதல் பரிசு சேலம் அணி
இரண்டாவது பரிசு திருச்சி. அணி
மூன்றாவது பரிசு மதுரை அணி
நான்காவது பரிசு தூத்துக்குடி அணி
திண்டுக்கல் பழநி ஆகிய அணிகள் ஆறுதல் பரிசு பெற்றன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments