தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை-18 ஆம் நாள் அந்தநல்லூர் ஒன்றியத்தில் இன்று (18.07,2023) மிகச் சிறப்பாக “தமிழ்நாடு நாள் விழா” ஆக கொண்டாடப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்டஅம்மாமண்டபம் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டுகள் அடைக்கப்பட்டன. மரக்கன்றுகள் நடும்விழாவை ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமையேற்று நடத்தினர், துணை ஆணையர் வைத்தியநாதன் , வார்டு உறுப்பினர்கள்இராதா, செல்விமணி, உதவிப்பொறியாளர் .பாலமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம் சைன் திருச்சி மனோஜ்குமார் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய மாவட்ட செயலர் மோகன்ராஜ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் , ஸ்ரீ ரெங்கநாதா நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு ஒரு மாணவருக்கு ஒரு மரம் என்ற வகையில் மரக்கன்றுகள் நடுவதற்கு இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments