திருச்சி உள்ள கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரபிந்த்குமார் (35). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பயணச்சீட்டு பரிசோதராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் ‘சேது’ அதிவிரைவு ரயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் அரபிந்த்குமார் பணியில் இணைந்துள்ளார்.
அந்த இரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் டிக்கெட் பரிசோதகருக்கும், பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணி சென்னையில் உள்ள தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றிவருகிறார்.
கிருஷ்ணமூர்த்தி ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு இரயிலில் பணிக்கு திரும்புகையில் பரிசோதகருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பீகாரை சேர்ந்த இரயில்வே டிக்கெட் பரிசோதகர் அரபிந்த் குமார் என்பவர், தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, இரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு பயணிகள் அழைத்து வந்தனர். பின்னர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எஸ்ஆர்எம் யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய தமிழ்நாடு அரசு ஊழியரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரையும் விசாரணைக்காக விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments