Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது- திருச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேட்டி

தமிழக முதலமைச்சர் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களாக துார் வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் நேரத்தில் 7 வாக்குறுதிகளை திருச்சியில் அறிவித்தோம். கடந்த ஒரு வருடத்தில் நம் தமிழக அரசு எடுத்துள்ள திட்டங்கள் திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு 62 கோடி செலவில் 4161 கி.மீ நீளத்திற்கு 641 பணிகள் நிறைவேற்றி உள்ளோம். டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். கடந்த ஆண்டு 4.90 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்றது. சம்பாவில் 13.34 லட்சம் ஏக்கர் சாகுபடி நடைபெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் 80 கோடி மதிப்பீட்டில் 4964 கிமீ நீளத்திற்கு, 683 பணி இடங்களில் துார் வாரும் பணி நடைபெற்று உள்ளது. 1850 கிமீ சி, டி வாய்க்கால்களில் 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

4418 கிமீ நீளத்திற்கு துார் வாரும் பணி நடந்து முடிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மேட்டூர் அணையானது மே 24 திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 2.5 லட்சம் ஏக்கரும், 13.5 லட்சம் ஏக்கரும், சாகுபடி பரப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முழுமையடைந்துள்ளது. உழவர்களுக்கு 61 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். பின்னர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்…..நானும் ஒருத்தன் இருக்கிறேன் என்பதற்காக எதையாவது எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜாதி சண்டைகள், கலவரங்கள், கூட்டு வன்முறைகள் நடக்காத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிற காரணத்தினால் தான் முதலீடுகள் வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது.

மேலும் அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்றும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பண பலன்கள் மற்றும் ஓய்வு பெறும் வயதை குறைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர். செய்தியாளர் சந்திப்பு முடித்தபிறகு தனி விமானம் மூலம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *