Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழகத்தை கொரோனா தொற்றில் பூஜ்ஜியமாக்குவதே எண்ணம்- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஸ்கேனிங் பிரிவு ,நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும் கேட்டு அறிந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது……

திருச்சியில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கு பொருத்தி உள்ளனர்.

60 லட்சம் பேர் பல்வேறு இடற்பாடுகளுடன் இருப்பது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்.தமிழகத்தில் 6,640 பேர் கிட்னிக்காவும்,314 கல்லீரல்,இதயம் 40, கைகள் 24 போன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

2 வது அலையில் 3 லட்சம் பேர் படுக்கையில் இருந்தனர் – ஆனால் இன்று முழுவதும் குறைந்துள்ளது இதற்கு எல்லாம் தடுப்பூசிகள் தான் காரணம் என்றார்.92% என்கிற அளவில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசியால் தான் மூன்றாவது அலையில் இறப்பு இல்லாமல் இருந்தது.

1,500க்கும் மேற்பட்ட ஐ.சி.யூ படுக்கைகளை நாம் எல்லா மாவட்டத்திலும் தயார் செய்து வைக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.கொரோனோ தொற்று வரும் உருமாறுதல்களை பற்றி நாம் கவலையும் பதட்டமும் கொள்ள வேண்டாம்.

மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டு உள்ளது .உருமாறி வரும் கொரோனோ இதுவரை தமிழகத்தில் XE போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை – BA2 ஒமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது.மரபியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.

சர்வதேச விமான நிலையத்தில் 2% என்கிற அளவில் தோராயமாக டெஸ்ட் எடுத்து வருகிறோம்.தமிழகத்தில் 1.37 கோடி பேர் இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.

44 லட்சம் பேர் முதல் தடுப்பூசிகளை கூட போடாமல் உள்ளனர்.தமிழகத்தில் இன்னும் சிலர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.பழங்குடியினர்கள் எல்லாம் கூட ஒத்துழைப்பு கொடுத்து செலுத்தி கொள்கின்றனர். ஆனால் படித்தவர்கள் தான் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தான் முதலாவதாக வழங்குகிறோம் . அதன் பின்னர் நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் பின்னர் இந்தியாவிலேயே யாரும் உறுப்புகளை தேவை இல்லை என்கிற பட்சத்தில் கடைசி வாய்ப்பாக வெளி நாட்டவருக்கு அளிக்கிறோம்.

தமிழகத்தில் 29 மாவட்டத்தில் கொரோனோ பூஜ்யம் என்கிற நிலையில் உள்ளது என தெரிவித்தார்.முன்னதாக சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்த பொழுது முதல்வர் வனிதா உள்ளிட்ட மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *