குரூப்2ல் தேர்ச்சி பெற்று நேரடி உதவியாளராக 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வருபவர்களுக்கு புரோபஷனல் துணை தாசில்தார் பணியிடம் வழங்கி, சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்
2019ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் துணை வட்டாட்சியர் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு தகுதியான நபர்களுக்கு துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அதிகமான பணிச் சுமையினைக் கருத்திற்கொண்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் துணைவட்டாட்சியர் நிலையில் பணியிடங்களையும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் துணை வட்டாட்சியர் நிலையில் பணியிடங்களை உருவாக்கிடவேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில்
இன்று மாவட்ட தலைநகரங்களில் வருவாய்துறை அலுவலர்கள் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை தமிழ்நாடு வருவாய்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் துறையில் பணியாற்றும் வருவாய்துறை நேரடி நியமன அலுவலர்கள் பங்கேற்று அரசுக்கு தங்களது கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையில் முழக்கம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments