தமிழ்த் திரைப்பட பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகனும், பிரபல நடிகருமான விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கினார்.
தான் நடித்துவரும் படத்தோடு தமிழ்த்திரையுலகிலிருந்து விலக முடிவெடுத்துள்ள விஜய் முழுமையாக இனி அரசியலில் ஈடுபட போவதாகவும், அரசியல் புனிதமான பணி, தொழில் அல்ல என்கிற தனது கருத்துடன் களமிறங்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து அவரது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் திருச்சி சத்திரப்ப பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments