தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்ட தமுமுக தலைவர் ஷேக் அகமது தலைமையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்…. சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
அதேபோல் 20 வருடங்களுக்கு மேலாக குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணை கைதிகளாக 49 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சிறைவாசிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 161ஐ பயன்படுத்தி மாநில அரசே விடுதலை செய்யும் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வந்தன. மேலும் பல சிறைவாசிகளுக்கு நீதிமன்றங்கள் பிணை மற்றும் பரோல் வழங்கியும் சிறை நிர்வாகமும் கடந்த தமிழக அரசும் பரோல் வழங்க மறுத்து வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட புழல் சிறையிலிருந்த சிறைவாசிகளின் உயர் பாதுகாப்பில் இருக்கின்ற இருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற புகார் வந்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் சமம் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு முன் அவர்களுக்கு ஜாதி, மத, இன பாகுபாடு காட்டக்கூடாது.
மத பாகுபாடு காட்டுவதால் இவர்கள் இத்தனை ஆண்டுகளாக தனது இளமைக்காலத்தை தொலைத்து முதுமையை எட்டிய பிறகும் இவர்களின் விடுதலை தள்ளி செல்கின்றது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு கருணை உள்ளத்தோடு அவர்களின் எஞ்சியுள்ள காலத்தை அவர்கள் குடும்பத்தோடு களிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் 161 ஐ பயன்படுத்திவிடுதலை செய்திடவும் அல்லது குறைந்தபட்சம் தற்காலிக தீர்வாக இந்த கொரானா காலத்தில் உடனடியாக அவர்களை நன்நடத்தை அடிப்படையில் தமிழக அரசு மூன்று மாதகாலம் பரோல் வழங்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments