திருச்சியில் கிராமின் லோன் மேளா நடைபெற்றது. இதில் ஹெடிஎப்சி வங்கி வணிக மற்றும் கிராமப்புற வங்கி குழு தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா செய்தியாளிர்களிடம் கூறுகையில்… நேற்று ஒரு நாள் மட்டும் 5 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சிறு மற்றும் குறு விவசாயிகள், கரும்பு விவசாயிகள், பால் பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் உட்பட பின்தங்கிய வாடிக்கையாளர் பிரிவுகளை இலக்காக கொண்டு நாடு முழுவதும் லோன் மேளாக்களை நடத்தி வருகிறோம். மாநில அளவில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் ஹெச்டிஎப்சி வங்கி முதலிடத்தில் இருப்பதாக வங்கியாளர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அயோத்தி, ஜான்சி, பரத்வான், எலுரு, ஆந்திரபிரசேதம், கலபுர்கி ஆகிய இடங்களில் கடன் மேளாவை வெற்றிகரமாக நடத்தினோம். ஜூன் 30 மாதம் வரை 48% கிளைகள் அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ளன. நாடு முழுவதும் 7800 கிளைகள் மற்றும் நகரரரங்களில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏடிஎம்கள் செயல்பாட்டில் உள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பெருவாரியமான மக்கள் ஹெடிஎப்சியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். திருச்சி மற்றும் 10 மாவட்டங்களில் கடந்த மாதம் 600 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிராமியக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாடு வளர்ச்சி அடைவதற்கு கிராமப்புற மேம்பாடு மற்றும் பணி வாய்ப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments