திருச்சி – புதுக்கோட்டை சாலையில் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையில் மதுபான கூடத்துடன் இயங்குகிறது. இதில் புதுக்கோட்டை சேர்ந்த ஒருவர் மதுபானம் வாங்க வந்துள்ளார். குவாட்டர் மதுபான பாட்டிலுக்கு இருபது ரூபாய் கூடுதலாக விற்பனை செய்துள்ளனர்.
அவர் வாங்கிய மதுபானத்திற்கு 20 ரூபாய் எதற்கு கூடுதலாக பணம் வாங்குகிறீர்கள் ஏன் என கேட்ட பொழுது வாக்குவாதம் ஏற்பட்டு மதுபான கடையில் உள்ளவர்கள் அவரை தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி 10 ரூபாய் கூடுதலாக மதுபானம் விற்கும் பணியாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார். திருச்சியிலுள்ள மதுபான கடையில் 20 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி மதுஅருந்தவர்கள் முன்வைக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments