தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17, 18 மற்றும் 19-ந்தேதி ‘உள்பட 3 நாட்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் சிலர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதனடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உய்யகொண்டான்மலை ரோட்டில் செல்வேந்திரன் மற்றும் ஒருவர் ஒரு புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாகர், 2 பேரை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவதானம் ஜங்ஷன் அருகிலும், ஏர்போர்ட் ஸ்டார் நகர் ஜங்ஷன் அருகிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கீழதேவதானத்தை சேர்ந்த கவியரசன் (25) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், பழனி பிள்ளையார் தெருவை சேர்ந்த ரேமண்ட் (54) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 430 மதிப்பிலான 718 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments