தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த கோரி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்தார். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் சமயபுரம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பதும், தனியார் சிமெண்ட் ஆலை ஊழியரான இவர் மது போதையில் தீக்குளித்த முயற்சி செய்ததாகவும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமயபுரம் போலீசார் பழனிச்சாமி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
டாஸ்மாக் எதிரில் தீக்குளிக்க முயற்சி செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு போக்குவரத்து ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments