திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முத்துப்பாண்டி (27), இவருடைய தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு அண்ணன் ஒருவர் உள்ளார். முத்துப்பாண்டி கோயம்புத்தூரில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே உள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் ஒரு மீன் கடையில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கம் போல மீன் வெட்டும் தொழில் ஈடுபட்ட அவரை அவரது நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் முத்துப்பாண்டியை ஏற்றி சென்றதாக அங்கு இருந்தவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் இரண்டு பேரும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு பொன்மலையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே புற்று நாகம்மாள் கோவில் பின்புறம் கழுத்தில் கத்தி குத்து காயங்களுடன் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது முத்துப்பாண்டி தான் என்பது தெரியவந்தது. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். பின்னர் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்த ஸ்டான்லி (27), சதீஷ் என்கிற மூல சதீஷ் (23) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, இறந்து போன முத்துப்பாண்டி தொடர்ந்து அந்தப் பகுதியில் பெண்களை கேலி செய்து தகராறு ஈடுபட்டு வந்ததாகவும், இருவரும் சேர்ந்து முத்துபாண்டியை பலமுறை எச்சரித்ததாகவும்,
மீண்டும் இதுபோல் சம்பவத்தன்று பெண்களை கேலி செய்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்ததால் மது போதையில் இருந்த முத்துப்பாண்டியை கொலை செய்தோம் எனக் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments