திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டியில் இருந்து பெரிய கல்லாங்குத்து செல்லும் வழியில் அமைந்துள்ளது மொண்டி கருப்புசாமி கோயில். நேற்று முன்தினம் நள்ளிரவில் கோயில் உண்டியலை மரம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டதால்,
அப்பகுதியில் குடியிருக்கும் நபர்கள் கோயிலுக்கு சென்று பார்த்த பொழுது, மர்ம நபர் ஒருவர் கோயிலில் இருந்த வேலின் அடிப்பகுதியான கூர்ப்பகுதியை கொண்டு உண்டியலின் சுற்றுப்புறத்தில் ஓட்டையை ஏற்படுத்தி அதில் இருந்த காணிக்கைகளை திருடிக் கொண்டிருந்தார். அப்பொழுது கொள்ளையனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கொள்ளையனை பிரித்து விசாரணை செய்ததில் அவன் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்ததன் பேரில், கோவில் உண்டியலில் இருந்து திருடிய ரூபாய் 1500 ஐ பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்ததன் பேரில் அவனை கைது செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments