கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் காய்கறி மளிகை மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை பகல் 12 மணி வரை இயங்கும் என்றும், மற்ற அனைத்து கடைகள் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாநகரில் உள்ள 8 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக 14 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறந்திருந்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments