எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், 2024 – ஐ சிறப்பாக நடத்தி முடித்திடும் பொருட்டு முன்னேற்பாடு நடவடிக்கையாக பதட்டமான வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிவாரியாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரிடமிருந்து 159 பதட்டமான வாக்குச்சாவடிகள் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பதட்டமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ள 139.ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவானைக்கோவில் கொண்டயம்பேட்டை மாநகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும்,
140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மற்றும் உறையூர் சேஷாய் மேல்நிலைப் பள்ளியிலும், 141.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியிலும், 144. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுனைபுகநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சென்னக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளிலும்
இன்று (20.02.2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் மற்றும் மாநகர் பகுதியில் காவல் ஆணையர் என்.காமினி மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் ஆகியோருடன் கூட்டாக நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, மாநகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments