தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையானதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட திருவிழா, பூச்சொரிதல் விழா மற்றும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று (02.02.2025) காலை நடந்தது. உற்சவர் அம்மன் சிறப்பு அலங் காரத்தில் மரக்கேடயத்தில் புறப்பட்டு கொடிமரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.
நாளை முதல் 8ம் தேதி வரை, காலை அம்மன் பல்லக்கில் வீதியுலா மற்றும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் உற்சவர் அம்மன் வீதியுலாவும் 9ம் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 10ம் தேதி இரவு தைப்பூச திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. 11ம் தேதி இரவு அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments