திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை யில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் உள்ள குயின்ஸ் பகுதியில் இருந்து மகான் ஒருவர் இங்கு வந்து ஜீவசமாதி அடைத்தள்ளார் அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் அவருக்கு குருபூஜை நடைபெற்று வருவது வழக்கம் அதனை முன்னிட்டு இன்று அறுபதாவது ஆண்டு முன்னிட்டு குருபூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதனைக் காண கரூர் கோயம்புத்தூர் கடலூர் சென்னை ஆகிய பகுதியில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர்.
ஜீவ சமாதியை தரிசனம் செய்து தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக் கொள்வதால் அவர்கள் வேண்டுதல் நடைபெறுவதாக தெரிவித்தனர் குருபூஜை யில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Comments