திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராம்விநகர் கே.கள்ளிக்குடி ரைஸ்மில் அருகே சாலையோரம் ஒரு கட்டப்பை கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து ராம்ஜிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தில் கிடந்த கட்டப் பையை பிரித்து பார்த்த போது பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை துணியால் சுற்றி அட்டை பெட்டையில் வைக்கப்பட்டு அதன் மேல் வேப்பிலை இலை போட்டு மறைத்து வைத்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார் திருச்சி சைல்டு லைனிடம் ஒப்படைத்ததையெடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து ராம்ஜிநகர் காவல் உதவி ஆய்வாளர் பிரபு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த குழந்தையை சாலையோரம் வீசி சென்றனர் யார் என்பதும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளதா என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments