Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

2 நாட்களுக்கு முன் காணமல் போன சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு

திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர்கள் இரட்டைமலை – தனலட்சுமி. இவர்களின் மகள் சிவரஞ்சனி (11). மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தார். சிவரஞ்சனியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என சிறுமியின் தாய் நேற்று அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காணாமல் போன சிறுமியை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பெரியமிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உள்ள சேகர் என்பவர் வீட்டில் உள்ள கிணற்றில் சிவரஞ்சனியின் சடலம் மிதந்து உள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனவளர்ச்சி குன்றிய சிறுமி சிவரஞ்சனி 6 முறை காணாமல் போனதாகவும், அந்த சிறுமியை காவல்துறையினர் கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தாக போலீசார் கூறுகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *