திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாயில்லா ஜீவனை அடித்து கொன்று இழுத்துக் வரும் மனதை பத பதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அது மட்டுமல்லாமல் நாயை அடித்து நடுரோட்டில் இழுத்துக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏறி இழுத்துக் கொண்டு செல்லும் காட்சியை ஒருவர் கைபேசியில் பதிவும் செய்துள்ளார். எதற்காக இந்த சம்பவத்தை அரங்கேற்றினார்கள் என்பதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இக்காட்சியில் வரக்கூடிய இளைஞர்கள் கூனி பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 பேரும் போதையில் இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் . மேலும் நாய்யின் மேலே பெரிய கல்லை போட்டு கொன்று உள்ளனர். திருச்சி மாநகரில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பினர்.
மேலும் ப்ளூ கிராஸ் திருச்சி துணை தலைவர் ராகவன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் .இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் வரும் ஆட்டோவின்(Tn45 bk8745) எண்ணை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.ஆனால் மாநகராட்சி அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் தற்பொழுது இவர்கள் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments