ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், நெல்சன் ரோடு காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள 2.57 ஏக்கர் பரப்பளவில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கோசாலை, மருந்தகம் மற்றும் தீவனம் வைக்கும் அறை கட்டும் பணியினை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பணி நடைபெற உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் அசோகன், இளநிலை பொறியாளர் நந்தகுமார் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஆண்டாள் இராம்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
389
06 April, 2023










Comments