திருச்சிராப்பள்ளி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1349-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் இருவரும் முதலாவதாக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அரசு சதய விழாவிற்க்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்ய ஒத்தக்கடை பகுதிக்கு வருவார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் தலைமையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அவரது திருவருவு சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், மாணிக்கம், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், அருண் நேரு,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் கருப்பையா சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம் காஜாமலை விஜி, முத்துக்குமார், கருணாநிதி, மோகன்தாஸ், நாகராஜ், கமல் முஸ்தபா, கதிர்வேல், ராம்குமார், செவந்தி, லிங்கம்சிங்காரம், தொமுச குணசேகர் கண்ணன், மண்டி சேகர், கிராப்பட்டி செல்வம், பாலசுப்ரமணியன் குமரவேல், புத்தூர் தர்மராஜ், ராமதாஸ், கலைச்செல்வி, கருணாமூர்த்தி, கருத்து கதிரேசன், தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments