Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மெகா தடுப்பூசி முகாமில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கடந்த 23.10.2021 அன்று நடைப்பெற்ற 6வது மெகா தடுப்பூசி முகாமில் 27,532 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . மேற்படி நபர்களுக்கு பரிசு வழங்க கோட்டம் வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

முதல் பரிசு Fridge – 4 நபர்களுக்கு , இரண்டாம் பரிசாக Washing Machine – 4 , மூன்றாம் பரிசாக Wet Grinder – 8 நபர்களுக்கு மற்றும் Cycle – 40 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் வழங்கினார். 

மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பி.சிவபாதம், உதவி ஆணையர்கள் எம் ,தயாநிதி, ச.நா.சண்முகம், சு.கமலக்கண்ணன், எஸ்.செல்வ பாலாஜி, அக்பர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *