Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

மாயனத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் தண்ணீரில் லாரி டியூப் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட சடலம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள ஆற்றின் வழியாகத் தான் இறந்தவர்கள் உடலை எடுத்துச் சென்று மக்கள் தகனம் செய்து வந்தனர்.

ஆனால் ஆற்றில் நீர் சென்றால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வது என்பது மிகவும் சிரமமாக இருந்து வரும் நிலையில் மயானத்திற்கு ஆற்றை கடந்து செல்ல ஒரு சிறிய பாலம் அமைத்து அதற்கான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை வசதிகள் ஏற்படுத்தி தராத நிலையில் இன்று வயது முதிர்வின் காரணமாக 70 வயது மதிக்கத்தக்க பூச்சாயி அம்மாள் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை இறுதி ஊர்வல வாகனத்தில் வைத்து வீட்டில் இருந்து மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் ஆற்றில் நீர் சென்று கொண்டிருந்ததால் உடலை கொண்டு செல்ல முடியாத நிலையில் இறுதி ஊர்வல ரதத்தில் இருந்து உடலை இறக்கி பின்னர் காற்று நிரப்பப்ட்ட லாரி டியூப்பில் இறந்த பெண்ணின் சடலத்தை வைத்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆற்றை கடந்து சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

மிகுந்த சிரமத்தில் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதுபோன்ற துயரமான நிகழ்வை தடுக்க ஆற்றில் சிறிய பாலமும், அதன் அருகே பாதை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *