திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியைச் சேர்ந்த ராகவன் வயது 48. இவர் பூலாங்குடியில் மெடிக்கல் உடன் சேர்ந்து கிளினிக் நடத்தி வருவதாகவும், அவர் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக 104 எண் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது.
இந்நிலையில் இன்று மருத்துவ இணை இயக்குனர் லட்சுமி மற்றும் துணை இயக்குனர் ராம் கணேஷன் ஆகியோர் புகாரின் அடிப்படையில் மருந்தகத்தில் ஆய்வு செய்ததில் மருத்துவ உபகரணங்கள் எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் ராகவனிடம் விசாரித்த போது தான் மருத்துவம் பார்க்கவில்லை என்று மறுத்துள்ளார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி மருத்துவம் பார்த்ததாக கூறப்படும் மருந்தகத்திற்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். மேலும் இதுக்குறித்து அடுத்த கட்ட விசாரணையானது மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் படி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg
Comments