பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய உருவ சிலைக்கும் அதேபோல மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவருடைய மணி மண்டபத்திலும் இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் கே என் நேரு, ரகுபதி, மெய்ய நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வீர வாள் பரிசளிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments