திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவர் மற்றவர்கள் பயன்படுத்திய லாரிகளை வாங்கி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு லாரியை எடுத்து வந்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில்,
சமயபுரம் 94 கரியமாணிக்கம் பிரிவு சாலையில் லாரி சென்றபோது திடீரென டீசல் டேங்க் வெடித்ததில் வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி எரிந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments