கொரோனா தொற்று 2வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் இம்மாதம் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியமிளகுபாறை பகுதியில் இன்று வார சந்தை நடைபெற்றது.
இங்கு காய்கறி, மளிகை சாமான்கள் போன்றவற்றை 20க்கும் மேற்பட்ட தரைக்கடை இருந்தன. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க இங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர். இதில் சிலர் முக கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி பின்பற்றாமல் பொருட்களை வாங்கி சென்றனர்.
இது போன்று அரசு உத்தரவை மீறி செயல்பட்டும் சந்தைகள், கடைகள் போன்றவை கண்டறிந்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு உத்தரவுகளை முறையாக பின்பற்றி வியாபாரிகளும், பொதுமக்களும் செயல்பட்டால் மட்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments