முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அப்பளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே உணவு அருந்தி கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிரியர்களை அழைத்து ஏன் 6 மாணவர்கள் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள் தினம் எத்தனை பேருக்கு சமைக்கப்படுகிறது, எவ்வளவு மாணவர்கள் சாப்பிடுகிறார்கள் என கேட்டறிந்தார். மேலும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்ததோடு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் காலை உணவு மிகவும் சுவையாக உள்ளது எனவும் மேலும் சாப்பிடாத மாணவர்களை உடனடியாக உணவருந்தவும் அறிவுறுத்தினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
Comments