தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன இதில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். மேலும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி பீமநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று (10.06.2024) நடைபெற்ற மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் பள்ளி குழந்தைகளுடன் பயிலும் பாடம் குறித்து கலந்துரையாடினார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் என்று அறியாத குழந்தைகள் அவருடன் சிரித்து மகிழ்ந்து உரையாடினர். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments