Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் திமுக ஆட்சிக்கு வராது திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி சூளுரை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார், ரத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் திமுகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேசுகையில்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயக கடமையை செய்தவரை கைது செய்திருக்கின்றனர். ரமேஷ் என்பவர் 30 வாக்குசாவடிக்கு  சென்று கள்ள ஓட்டு போட்டுள்ளார். அந்த நபரை ஜெயக்குமார் அழைத்து சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தது எப்படி தவறாகும். ஜனநாயகத்தை காப்பாற்றியவர் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறிது அளித்து தற்போது ஏமாற்றி வருகிறார். மேலும் நீட்‌ தேர்வு, நகைக்கடன் ரத்து செய்யப்படவில்லை.

மக்கள் கேட்கிறார்கள் அமைச்சர்களை பார்த்து நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே என்று. எத்தைன வழக்குகள் போட்டாலும் அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். வரும் காலம் அதிமுக காலம். சென்னை கோட்டையில் அதிமுக கொடி பறக்கும். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் தேர்தல் முடியும் வரை நாடகம் நடத்தியிருக்கிறார்கள். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பேசுகையில்… ஜெயக்குமார் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது. தெரிந்தோ தெரியாமலோ மக்கள் ஸ்டாலினை முதல்வராக்கி விட்டார்கள். மத்திய அரசை சிறுமைபடுத்த ஒன்றிய அரசு என தமிழக அரசு சொல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான். வெள்ள நிவாரண நிதி மத்திய அரசிடம் தான் பெற வேண்டும். ஸ்டாலினின் வாய் கொழுப்பினால் விவசாயிகளுகு உரம் வாங்க முடியாமல் தவிக்கின்றார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்படி கைது செய்யப்பட்டவரை அதேபோல விரைவில் முக ஸ்டாலின் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யும் நிலை எங்களுக்கும் வரும் என சூளுரைத்தார்

இறுதியாக பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்… ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் அப்போது திமுகவின் முகம் கிழித்தெரியப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு குளறுபடிகளை திமுக செய்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக திருச்சி மாநகராட்சி வார்டுகளில் வாக்கு நிலவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *