திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது அரசு பேருந்து ஓட்டுனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலைகுலைந்த ஓட்டுநர் கணபதி (55) மயங்கி விழ பேருந்து தனியார் பள்ளி அருகே இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுனரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது செல்லும் வழியில் ஓட்டுனர் கணபதி உயிரிழந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போக்குவரத்து தெற்கு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி பேருந்துகள் விபத்துக்கள் உள்ளாவது தொடர்கதை ஆகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த பள்ளியின் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது. தற்பொழுது இன்று அரசு பேருந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இன்று பள்ளி மாணவ, மாணவிகள் வருவதற்கு முன்பாக 7 மணி அளவில் இந்த விபத்து நடந்ததால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments