திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி வளர்க்கப்பட்டு பெண் யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டு திருச்சி எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்பு காட்டில் வனத்துறை சார்பில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி இன்றியும் போதிய பராமரிப்பு இன்றியும் தனியார் மூலம் வளர்க்கப்படும் யானைகள் மீட்டு எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி வன கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தனி நபர் ஒருவர் உரிய அனுமதி இன்றி சுந்தரி என்ற 67 வயதுடைய பெண் யானையை வளர்த்து வந்ததுடன் அதனை பொது இடங்களில் வைத்து பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும்,

மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுந்தரி யானைக்கு போதிய மருத்துவம் வழங்கப்படவில்லை என தொண்டு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் திருச்சி எம்.ஆர் பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க ஆவணம் செய்ததன் பேரில் எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு சுந்தரி யானை அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
385
05 April, 2023










Comments