திருச்சி எம்பவர் டிரஸ்ட் சார்பில் கொரானா நிவாரண பொருட்கள் பெரிய மிளகுபாறை குடிசைவாழ் பகுதியில் உள்ள முதியோர்களுக்கு நேற்று வழங்கியுள்ளனர்.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மூன்று முதியோர் தம்பதியினரை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான அரிசி உட்பட 14 மளிகை பொருள்கள் அடங்கிய ஒரு தொகுப்பு வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் முனைவர் D.ஜோதி வெங்கடேசன் கௌவுரவ விரிவுரையாளர் அரசு சட்டக் கல்லூரி திருச்சிராப்பள்ளி, முனைவர் மு. மகேந்திரன் இயக்குநர் மனிதவள மேம்பாட்டு துறை, புனித வளனார் கல்லூரி திருச்சிராப்பள்ளி,
மற்றும் கீத மாநில அமைப்பு செயலாளர் ஹிந்துமஸ்தூர் சபா திருச்சிராப்பள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.
பெரிய மிளகுபாறை இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மதியழகன் நிகழ்வில் பங்கு பெற்றார்.எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முனைவர் கனிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments