திருச்சி சமயபுரம் கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (47). காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரியான இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சமயபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமான செல்வராஜுக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது மனைவி சுமித்ரா தனது
கணவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதனையெடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் 12க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மூலம் செல்வராஜன் உடலில் இருந்த கல்லீரல், கிட்னி ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன.
பின்னர் நவீன ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு ஒரு கிட்னியும், இதேபோன்று திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒருவருக்கு மற்றொரு கிட்னியும் வழங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து மதுரைக்கு 2 மணி நேரத்தில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. உயிர் இழந்த பின்னரும் மற்றவர்கள் மூலம் செல்வராஜ் உயிர் வாழ்கின்றார் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments