திருச்சி கே.கே.நகர் பகுதியில் வெல் பேபி தடுப்பூசி மையம் என்ற பெயரில் குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தி வருகிறார் டாக்டர் ரமேஷ். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். ரமேஷின் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் தனது மகளுக்கு மருத்துவர் ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்த நிலையில், ரமேஷின் மனைவி திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரில் தனது கணவர் மகள் என்றும் பாராமல் பெற்ற மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து செய்து வந்தது, மகள் தெரிவித்ததை அடுத்து தனக்கு தெரியவந்ததாகவும், எனவே எனது கணவரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் துறையினர், டாக்டர் ரமேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் டாக்டர் ரமேஷை கைது செய்த போலீசார் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். குழந்தைகள் நல மருத்துவரே பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments