காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தனது பார்வை குறித்து விளக்குகிறார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் திமுக ஆட்சியில் முதல் முறையாக வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
“கிராம சபைக் கூட்டம் நடந்து சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது. 2020 ஜனவரி 26-ம் தேதி தான் இறுதியாக கிராம சபைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு, கொரோனா பெருந்தொற்று காரணமாக மே 1-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டமும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டமும் நடக்கவில்லை. கொரோனா தாக்கம் ஓரளவுக்கு குறைந்த சூழலில், 2020 அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று ஊராட்சி இயக்குநரகத்திலிருந்து அறிவிப்பு வந்தது.
பின்னர் அதுவும் ரத்து செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி தான் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கின்றது. கிராம சபை கூட்டம் என்பது மிக முக்கியமானது நம் இந்திய அளவில் முன்னேறுவதற்கு நாம் உள்ளூரில் முன்னேற்றம் மிக முக்கியமானது ஜனநாயக கடமை ஓட்டுப்போடுதல் என்பதை தாண்டி நம் உள்ளூர் பிரச்சனைகளை நாம் எடுத்துரைப்பது மிக முக்கிய பங்கு உள்ளது.
கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதை இன்றைக்கு கொரோனா காரணமாக கிராமசபை கூட்டங்களை ஒத்தி வைத்து இருந்தனர். ஆனால் இந்த பரவலை கட்டுப்படுத்துவதும் உள்ளூர் மக்களை பாதுகாப்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதும் நம்முடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான மிகமுக்கிய அமைப்பாக கிராம சபை கூட்டங்கள் செயல்படுகிறது.
மாநிலத்தில் மக்களின் தேவைகளை குறித்தும் திட்டங்கள் குறித்தும் நாடாளுமன்றம் செயல்படுவது போல கிராமசபை கூட்டங்கள் செயல்படுவது மிக அவசியமானது அப்பொழுதுதான் மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளை கொண்டு செல்வதும் அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வது பொதுமக்கள் ஒவ்வொருவருடைய கடமை ஜனநாயக கடமையை எவ்வாறு தவறாமல் செய்கின்றோமோ அதே போன்று கிராமசபை கூட்டங்களிலும் கலந்து கொள்வது அவசியமானது. நம்முடைய தேவைகள் நம்முடைய எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் நாம் இங்கு தெரிவித்தால் மட்டுமே அதற்கான அடுத்த கட்ட பணிகளை அரசு தொடர்வதற்கும் வழிவகுக்க முடியும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments