தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் ‘மனிதம்’ உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முன்னணி இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் ‘மனிதம்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்

யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மனிதம்’ திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார்.புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான ‘மனிதம்’ படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணராஜு, “உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை ‘மனிதம்’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான் முறையில் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறோம்,” என்றார்.

‘இன்ஃபினிட்டி’ மற்றும் ‘கழுமரம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் கிருஷ்ணராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் புருனோ சாவியோ சுமார் 25 ஆண்டுகள் கார்ப்பரேட், தொழில்துறை மற்றும் விளம்பரப் படங்களை உருவாக்கிய அனுபவம் பெற்றவர் ஆவார்.

‘மனிதம்’ திரைப்படத்திற்கு பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, வேலவன் கே படத்தொகுப்பை கையாண்டுள்ளார். மதுநிகா ராஜலக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இணை தயாரிப்பு: ஆனி நிர்மலா; இணை இயக்கம்: அருள்முருகன். ‘மனிதம்’ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

13 Jun, 2025
389
25 January, 2025










Comments