14.01.2022 அன்று பொங்கல் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாநகரம் மற்றும் மாநகரத்தின் வழியாக
பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாகவும், மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி (12.01.2022) புதன்கிழமை முதல் (18.01.2022) செவ்வாய்கிழமை வரை கீழ்கண்டுள்ள இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு, (12.01.2022) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கீழ்கண்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் இரவு, பகலாக திருச்சி மத்திய பேருந்து
நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகிறது.
தற்காலிக பேருந்து நிலையம் இயங்கும் இடம்/ பேருந்துகள் இயக்கப்படும்
வழித்தடம்
1. சோனா, மீனா திரையரங்கம் எதிரில் தஞ்சாவூர் மார்க்கம்
2. மன்னார்புரம் (பழைய இலுப்பூர் ரோடு) புதுக்கோட்டை மார்க்கம்
3. மன்னார்புரம் (மதுரை அணுகுசாலை) மதுரை மார்க்கம்
தற்காலிக பேருந்து நிலையங்கள் துவக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., திருச்சி மண்டலத்தின் சார்பாக பொது மேலாளர் (பொறுப்பு) குணசேகரன்,
துணை மேலாளர்கள் ஜீலியஸ் அற்புதராயன், சிங்காரவேலு மற்றும் கோட்ட மேலாளர் (நகரம்) சுரேஷ்குமார் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையின் சார்பாக உதவி ஆணையர் நிக்சன், போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments