திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு மலையும், மலையை சார்ந்த பகுதியாக இருக்கிறது. இந்த கொல்லிமலை பகுதியில் உற்பத்தியாகும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் வருகிறது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் இது சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அரியலூர், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், தம்மம்பட்டி, முசிறி ஆகிய ஊர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கோடைகாலம் என்பதால் ஐச்யாற்றில் நீராடி மகிழ குடும்பம் குடும்பமாக வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கல்லூரி மாணவர் ஒருவர் இப்பகுதியில் உயிரிழந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிப்பதற்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நட்டமாடு பகுதிக்கு கடந்த 50 நாட்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோடை விடுமுறை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்துள்ளனர்.
வனத்துறையினரின் தடையை மீறி உள்ளே சென்று குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் முள்வேலி அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
389
15 May, 2023










Comments