திருச்சி மாவட்டத்திற்கு 14,300 கோவிஷீல்டு மருந்து வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் திருச்சி மாநகராட்சி பகுதியில் 4 கோட்ட அலுவலங்களிலும், 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரக பகுதியில் உள்ள 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று 12.06.2021 காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள இன்று காலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொள்ள பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் வரிசை படி ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் , தன்னார்வலர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments