Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நடப்பு நிதியாண்டில் 6.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடித்து சொல்லும் அரசு!!

மத்தியநிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023 ஆகஸ்ட் மாதத்துக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறியதாவது… நுகர்வு மற்றும் முதலீட்டுக்கான உள்நாட்டு தேவை அதிகரித்திருப்பதால், 2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.80 சதவிகித வளர்ச்சியை நாட்டின் பொருளாதாரம் பதிவு செய்துள்ளது. பெருநிறுவனங்களின் லாபம், தனியார் துறையின் மூலதன உருவாக்கம், வங்கிகள் வழங்கும் கடன்கள் ஆகியவற்றின் அதிகரிப்பும் இதற்கு முக்கிய காரணிகள் ஆகும்.

பருவமழை பற்றாக்குறை : சர்வ தேசசந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை பற்றாக்குறையால் பயிர்களுக்கு பாதிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் ஏற்பட் டுள்ளது. எனினும், செப்டம்பர் மாதத்தில் கூடுதல் மழை பெய்து, ஆகஸ்ட் மாத பற்றாக்குறையில் ஒரு பகுதியை நிறைவு செய்துவிட்டது என்கிறார்கள் வல்லுநர்கள்.

முதலீட்டு செலவுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருவதன் விளைவாக,உள்நாட்டு முதலீடு வலுப்பெற்றுள்ளது. மேலும், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், முதலீட்டு செலவு அதிகரிக்க மாநில அரசுளுக்கும் ஊக்கம் கிடைத்துள்ளது. சேவைகள் ஏற்றுமதி அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு உயர்ந்துள்ளது. வங்கிகளில் வராக்கடன் அளவு குறைந்துள்ளது. வங் கிசாரா நிதி நிறுவனங்களின் லாபம் உயர்ந்துள்ளது. கட்டுமானத் துறை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசு எடுத்து வரும் திட்ட மிட்ட நடவடிக்கைகளால், நாட்டில் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்துள்ளது.

எனவே, கச்சா எண்ணை விலை உயர்வு,பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை போன்ற சிக்கல்களை மீறி, நடப்பு 2023- 24ம் நிதியாண்டில் 6.5 சதவிகிதம் அளவுக்கு நாட்டின் பொருளா தாரம் நிச்சயமாக வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பிட்டுள்ளார்கள் என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வரிசை கட்டும் பண்டிகை காலமும் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *