Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75 வது சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவினை முன்னிட்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் கள விளம்பரத்துறை அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.  இதில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கலந்து கொண்டு அரியவகை புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சி குறித்த கையேடுகளை வெளியிட்டார். 

இதில் கள விளம்பரத்துறை அலுவலர் தேவிபத்மநாதன் பேசியபோது…. இங்கு வைத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் அரிய புகைப்படம் இவை அனைவரும் பார்த்து, படித்து பயன் பெற வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து  தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர்  திரு.அண்ணாதுரை பேசுகையில்…. இன்று நடைபெறுகின்ற இக்கண்காட்சியானது இந்தியாவிலேயே மிக சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்த கண்காட்சி இடம்பெற்றது. அங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து பார்த்து பயன் அடைந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் தான் நடத்துகிறோம். இந்தியாவினுடைய விடுதலைப் போராட்ட வரலாறு, இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று எல்லா கிராமத்திலும் மின்சாரம் இருக்கிறது. 

நம்முடைய நாட்டுக்கு நாமே தேர்ந்தெடுக்கக்கூடிய அரசாங்கம் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று பாடுபட்டவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வைத்திருக்கும் புகைப்பட கண்காட்சிகளால் பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் எனவும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பார்த்து செய்தியை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம் பேசுகையில்…. இன்று தொடங்கி 5 நாள் நடைபெறும் கண்காட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முகம் தெரியாமல் ஆங்காங்கே இருக்கக்கூடிய தலைவர்களை நாம் அறிந்துகொள்ளும் விதமாக  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தில் படித்த தலைவர்களை தவிர பிற தலைவர்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறார்கள். மாணவர்கள் இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும்,

சுதந்திரமடைந்த நாட்டை எவ்வாறு வளர்ச்சி அடையும் செய்ய வேண்டும் என்பதை 75 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னிலைப்படுத்தி வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி கருத்துக்களுக்கு இனங்க கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது அனைத்து மாணவ மாணவிகளும் பார்த்து படித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இக்கண்காட்சியை பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *