திருச்சி குளித்தலை சாலையில் உள்ள காவல்காரன்பட்டி என்ற இடத்தில் ஒரு முட்புதரில் இன்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது முட்புதரில் ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை பிறந்து அரை மணி நேரமே ஆகியிருக்கும் என தெரியவந்தது.
அதற்குள் அந்த குழந்தையை முட்புதரில் வீசி சென்றுள்ளனர். இதையடுத்து உடனடியாக அந்த – குழந்தையை தோகைமலை போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிறந்த குழந்தையை முட்புதரில் விசி சென்ற தாய் யார்? என்றும், முறைதவறி பிறந்தததால் குழந்தை வீசப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதரில் குழந்தை வீசப்பட்ட சம்ப வம் காவல்காரன் பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments