Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தொடர் கதையாகிவிட்ட மின்கம்பங்கள் விழும் சம்பவம்

திருச்சி மாநகர பகுதிகளில் சாலையில் நடுவே சிமெண்ட் கட்டைகளை கட்டி அதன் நடுவே பூ செடிகளை வளர்த்து வைத்து அழகுப்படுத்துவதை மாநகராட்சி செய்து வந்தது. அதன் நடுவில் மின்கம்பங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மின் கம்பங்களுக்கு இடையே இணையதள வசதி, (தொலைக்காட்சி) பார்ப்பதற்கு தேவையான கேபிள்  ஒயர்களை கட்டி வைத்திருந்தனர்.

கடந்த இரண்டு மாதமாக முதலில்  கன மழை பெய்த பொழுது திருச்சி மாநகராட்சியின் அருகாமையில் மின்கம்பங்கள் இரவில் சாய்ந்தன. அதேபோல் மாநகராட்சி எதிராகவும் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தது. இது தற்பொழுது மாநகராட்சி பகுதிகளில் தொடர் கதையாகி விட்டது .

இன்று திருச்சி – புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே ஆறு மின்கம்பங்கள் முறிந்தே விழுந்து விட்டன. இந்த மின்கம்பங்களுக்கு இடையேயும் இணையதள, தொலைக்காட்சி கேபிளுக்கு ஒயர்கள் கட்டப்பட்டிருந்தது. தற்போது காற்று பலமாக வீசி வருவதால் இந்த மின் கம்பங்களுக்கு இடையே உள்ள ஒயர்களின் பாரம் அதிகமாக இருப்பதால் காற்று வேகமாக அடித்தவுடன் மின்கம்பங்களை சாய்ந்து முறிந்து விழவே செய்து விட்டது.

இதுவரை நடந்த மூன்று நிகழ்வுகளில் எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. மாநகராட்சி உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவங்கள் நிகழ்ந்த சாலை முழுவதும் பிரதான சாலைகள் எப்பொழுதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதி இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *