கொரோனா தொற்று 2ம் அலை காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக திருச்சி வெல்லமண்டி சாலையில் இருந்து காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு, மயிலம் சந்தை ரோடு வழியாக பாலக்கரை வரை இரவு மட்டும் மொத்த காய்கறி விற்பனை நடந்து வருகிறது. மொத்த காய்கறி விற்பனை மேலரன் சாலை எனப்படும் மேலப்புலிவார்டு சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை தினமும் இயங்கி வருகிறது.
மளிகை கடை பலசரக்குக் கடைகள் மற்றும் மீன், இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை இயங்கி வருகிறது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்ததால் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மூடப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் மேலப்புலிவார்டு சாலை, கடை வீதி உள்ளிட்ட இடங்களில் இரு சக்கர வாகனத்தில் திரண்டனர். இதனால் இப்பகுதியில் வழக்கத்தைவிட காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும் சமூக இடைவெளி என்பது காணாமல் போயிருந்தது. இந்நிலையில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. நெடுந்தூரப் பயணத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மேலப்புலியூர் பகுதியில் அதிகளவு குவிந்துள்ளனர்.
கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதைக் கூட பொருட்படுத்தாமல் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் திருச்சியில் நாளடைவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments