திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு திருவெறும்பூர் பகவதிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் குழாய் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் உள்ளதால் சாலைகள் குண்டும் போதுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டிய பாதாள சாக்கடை திட்ட பணிகளானது ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டுகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பணிகள் நடைபெறும் இடத்தில் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments